யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று முன்தினம் ஈன்றுள்ளது.
இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ள நிலையில் மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பசுவையும் கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
