தங்கம் மீதுள்ள ஈர்ப்பு எப்போதும் குறைவதில்லை. தங்கத்தின் மீது முதலீடு செய்வது பெரும் லாபத்தை ஈட்டுகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் அதை சரியான நேரத்தில் வாங்குவதும் முக்கியமான ஒன்று.
தங்க நகையை விரும்பாத ஒரு பெண்மணியை கூட நாம் பார்க்க முடியாது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே தங்கத்தின் மீதான் ஆர்வம் தொடங்கி இருக்கிறது.
தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும். இந்த திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் ஆகும்.
அடுத்து, சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், மிருகசிரீடம், ரேவதி, சித்திரை, அனுஷம், ஹஸ்தம், அசுவினி, பூசம், அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மைகள் உண்டாகும்.