• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பப் பெண்

März 30, 2025

வீதியால் நடந்து சென்ற முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடைக்கு பொருள்கள் வாங்கிவிட்டு வீதியால் சென்றவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று  (29) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி  விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed