• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்

März 26, 2025

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு, அது திருப்பதியின் மகத்துவத்துக்கு இணையாக மாறும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சட்டமன்றத்தில் பேசியபோது, ‘கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதாலேயே பக்தர்கள் பெருமளவில் வருகை தருகிறார்கள். திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நேரடியான நெரிசல் காரணமாக அல்ல, உடல்நல குறைபாடு காரணமாக ஏற்பட்டவை என அவர் விளக்கம் அளித்தார். தரிசனத்திற்கு வந்த பக்தர்களில், முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்  குறித்து நீங்கள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். முதல்வர் உத்தரவின் பேரில், கோயில்துறையின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும். இதில், கோயில்களுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும். தேவையான மருத்துவ வசதிகளும் கோயில்களிலேயே ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் முன்னர் இரண்டு கோயில்களில் மட்டுமே செயல்பட்ட அன்னதான திட்டம் தற்போது 17 முக்கிய திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, ஆண்டுதோறும் 3.5 கோடி பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும், அதிக மக்கள் திரள்வதற்காக 17 முக்கிய கோயில்களுக்கு ரூ.1,716 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்குக்கு பிறகு, அதன் அமைப்பு மற்றும் வசதிகளை பார்த்தால், அது திருப்பதியின் தரத்திற்கு சமமாக இருக்கும். பழனி கோயில் ஏற்கனவே திருப்பதியை ஒத்த அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed