• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

März 18, 2025

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (18.03.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிவப்பு சீனி, சிவப்பு பருப்பு, கோதுமை மா, ரின் மீன், உருளைக்கிழங்கு, வெள்ளை கௌப்பி, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 162 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed