• Mo.. März 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் விபத்தில் மூவர் படுகாயம்

März 16, 2025

கிளிநொச்சி – பளை முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிகளுடன் ஹையேஸ் ரக வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆண்களும், ஒரு யுவதியும் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக பளை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed