கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த திருவிழாவில் பங்கேற்க சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் யாழ்ப்பாணத்தில், குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்தும், மன்னாரில் இருந்தும் படகுகள் மூலம் கச்சதீவைச் சென்றடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
நேற்று கொடியேற்றம் மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன.
இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் விழா நிறைவடையும்.