• Di.. März 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தாயாருடன் உறக்கத்தில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு.

März 10, 2025

மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்தில் இருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு தாயாரிடம் பால் அருந்தியுள்ளது. அதன்பின்னர் குழந்தையும் தாயும் தமது வீட்டில் உறக்கியுள்ளனர்.இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை அதிகாலை குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக எழுப்பியபோது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது.

உடனடியாகக் குழந்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனினும், குழந்தை முன்னரே இறந்து விட்டது என்று வைத்தியர் தெரிவித்துள்ளார்.வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பணித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed