• Sa.. Feb. 22nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு : வெளியான தகவல் !

Feb. 14, 2025

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால், தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மின்சாரக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்ட போதிலும், பல நுகர்வோர் பொருட்களின் விலைகள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு ஈடாக, நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுகர்வோர் பொருட்களின் விலைகளை திருத்தியமைக்கத் தவறியதால் வாழ்க்கைச் செலவு இன்னும் கடுமையாகிவிட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணம் இருபது சதவீதமும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் முப்பது சதவீதமும் குறைக்கப்பட்டது.

பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed