• Do.. Feb. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் மருத்துவமனையில்

Feb. 13, 2025

போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய ஒன்பது வயதான சிறுமியொருவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

குளிர்பானம் அருந்திய நிலையில், தனது மகள் திடீர் சுகவீனமுற்றது கண்டு சிறுமியின் தந்தையும் அதே போத்தலில் இருந்து சிறிது குளிர்பானம் அருந்தியுள்ளார். அதனையடுத்து அவரும் சுகவீனமுற்றுள்ளார்.

மேலதிக பரிசோதனை

தற்போதைக்கு சிறுமியும் தந்தையும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சுகாதாரத்துறையினர், குறித்த குளிர்பான போத்தலை மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed