• Sa.. Feb. 1st, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியில் மோதப்போகும் சிறுகோள்: வானிலையாளர்கள் எச்சரிக்கை

Feb. 1, 2025

சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது சில ஆண்டுகளில் பூமியுடன் மோதும் என்று வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த சிறுகோள் 2024 லுசு4 என்று அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 200 அடி விண்வெளிப் பாறையான இது, 2032 கிறிஸ்மஸிற்கு முன்னதாக பூமியுடன் மோதக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் மோதல், பூமியில் கணிசமான அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேடலினா ஸ்கை சேர்வே மையத்தை சேர்ந்த டேவிட் ரங்கின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த சிறுகோளான 2024 லுசு4 பூமிக்கு வரும் நிகழ்வை தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோள் 40-100 மீட்டர் அகலம் கொண்டதாக கருதப்படுகிறது. சிலவேளைகளில் அது இந்த அளவை விட பெரிதாகவும் அமையலாம் என்று அவர் கணித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அது 301 மைல் உயரத்தில் பூமியைத் தாண்டிச் செல்வதைக் காணமுடிவதாகவும் வானிலையாளர் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், 2024 லுசு4 என்ற இந்தக் கோள், தற்போது பூமியிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல்கள் தொலைவில் விண்வெளியில் பயணித்து வருகிறது.

அத்துடன், இது மணிக்கு 13.5 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கிறது என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed