• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். புத்தூர் பகுதியில் 2 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்

Jan. 27, 2025

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு இவ்வாறு விற்பனையாகியுள்ளது.

புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் நேற்றையதினம் ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.

இதன்போது, விஷேட அபிஷேக ஆராதனைகளை  தொடர்ந்து முருகப் பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பக்த அடியவர் ஒருவரே   மாம்பழத்தினை  ஏலத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இரண்டு லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம் | Mango Auctioned For Two Lakhs Jaffna Murugan Kovil
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed