• Mo.. Jan. 27th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இடியுடன் கூடிய மழை ! வளிமண்டலவியல் திணைக்களம்

Jan. 26, 2025

 இலங்கையில் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed