• Sa.. Jan. 18th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புங்குடுதீவில் குளமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் !

Jan. 18, 2025

புங்குடுதீவு J / 23 கிராமசேவகர் பிரிவிலுள்ள மடத்துவெளி வெள்ளையன் குளம் என்றழைக்கப்படுகின்ற நீர்நிலையொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
யாழ் தெல்லிப்பளையினை சொந்த இடமாகவும் புங்குடுதீவு மடத்துவெளியினை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் ( வயது 38 ) என்கின்ற ஒன்றரை வயது குழந்தையின் தந்தையார் மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே குளிக்கச் சென்றதாகவும் பின்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினமே இக்குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியின் கிராமசேவகர் ச. சிறீதரன் தெரிவித்துள்ளார் . தற்போது சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed