• Sa.. Jan. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சனி மகா பிரதோஷத்தில் சிவனின் அருளை பெற இதை செய்ய மறக்காதீர்கள்

Jan. 11, 2025

சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இதை சனி மகாபிரதோஷம் என சிறப்பித்து சொல்லுவதுண்டு.

நூறு சாதாரண பிரதோஷங்களில் வழிபட்ட பலனை, ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு தரும். திதிகளில் 13வது திதியாக வரும் திரியோதசி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

தேவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு, ஈசனின் அருளை பெற்ற காலத்தையே பிரதோஷ காலம் என்கிறோம்.

பிரதோஷ விரதம் இருந்து சிவ பெருமானை வழிபட்டால் நாமும் கடந்த காலங்களில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். நல்ல ஆரோக்கியம், செல்வ வளம், ஞானம் என உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான இன்பங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாழும் போது மட்டுமின்றி வாழ்க்கைக்கு பிறகும் நற்கதியை அடைவதற்கான வழியை அளிப்பது சனிப்பிரதோஷ விரதமாகும். 2025ம் ஆண்டின் முதல் பிரதோஷமே சிறப்புக்குரிய சனிப் பிரதோஷமாக அமைந்துள்ளது. ஜனவரி 11ஆம் திகதி 2025ம் ஆண்டு முதல் பிரதோஷ விரதம் அமைந்துள்ளது.

பிரதோஷ விரதம் இருப்பவர்களின் பாவங்கள் நீங்கும். கெட்ட கர்மாக்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக பிரதோஷ விரதம் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பக்தி சிரத்தையுடன், தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கு சிவ பெருமான் அனைத்து விதமான நலன்களையும் வழங்குவார் என்பது ஐதீகம்.

பிறப்பு-இறப்பு சுழற்சியில் சிக்காமல் முக்தியை அடைவார்கள். பிரதோஷம் அன்று சிவ பெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். பழங்கள் கடைத்து மந்திர ஜபம் செய்வது சிவ பெருமானின் அருளை பெற உதவும்.

சனி பிரதோஷத்தன்று மாலையில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொண்டு மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது அதீத ஆற்றலையும், நன்மைகளையும் பெற்றுத் தரும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவனின் படத்திற்கு முன் நெய் விளக்கேற்றி வைத்து, நைவேத்தியம் படைத்தும், மணி அடித்தும் வழிபாடு நடத்தலாம்.

இதனால் வீட்டில் இருக்கும் தீயசக்திகள் அனைத்தும் காணாமல் போகும். சிவ மந்திரங்களை பிரதோஷ வேளையில் ஆழ்ந்த பக்தியுடன் உச்சரிப்பதால் சிவனின் பரிபூரண அருளை பெற முடியும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed