• Mi.. Jan. 1st, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்-கண்டி வீதியில் விபத்து. உயிரிழந்த பெண்

Dez. 28, 2024

மாத்தளையில் உள்ள கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் பலாபத்வல பகுதியில் நேற்றையதினம் (27-12-2024) இடம்பெற்றுள்ளது.

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed