• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்கா மொத்த விமானங்களும் தரையிறக்கம்!

Dez 24, 2024

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸின் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்போது, அனைத்து விமானங்களுக்கும் தரையிறக்குவற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாங்கள் அறியப்பட்ட தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்கிறோம்.

உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை, இது சரி செய்யப்பட்டதும், நாங்கள் உங்களை உங்கள் இலக்குக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அமெரிக்கன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிநுட்ப பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed