தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவையில் இருந்து பலடுவவ நோக்கி பயணித்த காரின் சாரதி உறக்கமடைந்து 100 எல் மற்றும் 100.1 எல் மைல் கம்பங்களுக்கு இடையில் அதே திசையில் பயணித்த லொறியின் பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்ததில் இலங்கைத் தமிழ் இளைஞன் மரணம்!
விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறுமிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய இராசிபலன்கள் (13.12.2024)
மாத்தறை நுபே பிரதேசத்தை சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலதிபரான தந்தை மற்றும் ஆசிரியரான தாயார் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு!
மூத்த மகளுக்கு சுகயீனம் ஏற்பட்டு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.