பிரபஞ்சத்தில் புதன் பகவான் சூரிய கடவுளின் மிக அருகில் உள்ள கிரகம். அறிவாற்றலை அள்ளித் தரும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் ஆவார். இந்நிலையில், புதனினின் வக்ர நிவர்த்தி, 2025 புத்தாண்டில் எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
இன்றைய இராசிபலன்கள் (11.12.2024)
புதன் கிரகம் டிசம்பர் 16 இரவு 1:52 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். முன்னதாக, புதன் நவம்பர் 26 ஆம் தேதி வக்ர நிலையை அடைந்த நிலையில், விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். ஜனவரி 4 வரை, புதன் இந்த நிலையில் விருச்சிக ராசியில் சஞ்சரித்து பின்னர் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவார்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு, புதனின் வக்ர நிவர்த்தி எல்லா வகையிலும் சிறந்த வெற்றியை அளிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உங்கள் முடிவுகளும், செய்த பணிகளும் பாராட்டப்படும். மாணவர்களுக்கும் நல்ல நேரம் அமையும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.
யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு இளம் தாயாரும் பலி!
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி வெற்றியைத் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முடிவுகளும், எடுக்கும் செயல்களும் நல்ல பலனைத் தரும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். திருமண யோகம் கைகூடி வரும். உறவினர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி எல்லா வகையிலும் பலன் தரும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பேறு, குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பல நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கனடாவில் தமிழ்த் தம்பதி கைது!!
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி காரணமாக நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள் படிப்பிற்காக வெளியூர் செல்ல முயற்சி செய்தால், நிலைமை சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி பெரும் வெற்றியைத் தருவார். ஏதேனும் முக்கிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தம் செய்ய விரும்பினால், கிரகப் பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். வேலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடும். காதல் திருமணத்துக்கும் ஏற்ற காலம் .