ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி (Hansaka Wijemuni) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கஞ்சா மீட்பு!
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.அதன்போது அவர் மேலும் கூறியதாவது, “12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1 ஆம் திகதி முதல் விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்துவோம்.
அதற்கான வர்த்தமானியை நடைமுறை படுத்த அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில், கடந்த அரசாங்கங்கள் மூலம் இது 7-8 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
டந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், இதனை நாங்கள் ஒத்திவைக்க மாட்டோம், ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்துவோம்.” என்றார்.