• Mo.. Jan. 6th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் – ஏழாலை தெற்கு பகுதியில் திருட்டு  சம்பவம்

Dez. 5, 2024

 யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழில் மூன்று வயது குழந்தை உயிரிழப்பு

நேற்றையதினம் (04-12-2024) குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகவுள்ள காற்று சுழற்சி !

இதனடிப்படையில் குறித்த நகையை திருடிய, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் (05-12-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் திருடிய நகையும் மீட்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed