• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல்

Dez 3, 2024

யாழில் (Jaffna) வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது யாழ், பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்க கணக்கினை வெளிப்படுத்துமாறு பொன்னாலை பகுதியில் வசித்து வரும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.

இந்தநிலையில், தொடர்ச்சியாக கணக்கறிக்கை வெளியிடபடாத நிலையில் இது தொடர்பில் முகநூலில் குறித்த கணக்கினை பகிரங்கபடுத்துமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து, மாலை வேளை குறித்த உப தலைவரின் இல்லத்திற்கு புகுந்த நிலையில் வீட்டிலிருந்தோரை தாக்கமுயன்று தகாத வார்த்தைகளால் பேசி சென்றுள்ளனர்.

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed