• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

Dez 1, 2024

யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் தாவடி சுதுமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய அன்னலிங்கம் செந்தில்குமரேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதியுள்ளது.இதன்பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவு வண்டி, குறித்த இடத்திற்கு வருகை தந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed