ஆப்பிள் நிறுவனத்தின் IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் படி, புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகி, இந்த மொடல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய IPhone SE -4 மொடலுக்காக ஆப்பிள் நிறுவனம் எல்.ஜி. இன்னோடெக் உடன் கூட்டணி அமைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் IPhone SE – 4 மொடலில் 48MP பிரைமரி கமரா, ஆப்பிளின் A18 சிப்செட், 3279 எம்ஏஹெச் பேட்டரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் விளக்கு வைக்கும் நிகழ்வு
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3ஆம் திருவிழா(04.04.2025)
- தெல்லிப்பழை வைத்தியசாலை தாதி ஒருவர் விபத்தில் சிக்கி மரணம்
- யாழில் இளம் அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
- சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்