வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 615,902 ஆக உயர்வடைந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நேற்று முன்தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,544 ஆக அதிகரித்துள்ளது.