வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் 08.11.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 47 அகவையுடைய சுபாஜினி தயானந்தன் என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்த நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலில் விசம் பரவியமையே மரணத்திற்கான காரணம் எனவும், இரவு நேரங்களில் விச ஊர்வன ஏதாவது கடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
- இன்று இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் விளக்கு வைக்கும் நிகழ்வு
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3ஆம் திருவிழா(04.04.2025)
- தெல்லிப்பழை வைத்தியசாலை தாதி ஒருவர் விபத்தில் சிக்கி மரணம்
- யாழில் இளம் அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
- சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்