மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.இடியுடன் கூடிய மழை
அத்தோடு, வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமெனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பிரித்தானியாவில் காலநிலை மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- ஆற்றில் கவிழ்ந்த வாகனம் !சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
- யாழ் நல்லூரில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை!
- சுவிஸ் சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனிப்பொழிவு !
- சனி – ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி