• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பஸ் விபத்து! 3 மாணவிகள் உயிரிழப்பு- 35 பேர் காயம்

Nov. 1, 2024

பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது .

விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 41 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று (01) காலை 7.45 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பதுளை மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் (துன்ஹிந்த நுழைவு வீதிக்கு அருகில்) பேருந்து கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 35 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed