• Do. Okt 31st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஸ்பெயினில் வெள்ளம்: 95 பேர் பலி

Okt 30, 2024

கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவில் குறைந்தது 95 பேர் இறந்துள்ளனர்.

வலென்சியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் அவசரகால சேவைகள் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகலுக்குப் பிறகு 95 பேர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

யாழ்.வடமராட்சி பகுதியில்  பயங்கரம்!! கணவனும் மனைவியும் படுகொலை

இதற்கிடையில், Cuenca மாகாணத்தில் 88 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்ததை காஸ்டில்லா லா மஞ்சா பகுதிக்கான மத்திய அரசு அலுவலகம் உறுதிப்படுத்தியது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், பிரஸ்ஸல்ஸ் ஸ்பெயினின் நெருக்கடியான தருணத்தில் உதவி செய்ய தயாராக உள்ளது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மாட்ரிட் செல்லும் வழியில் மலகா அருகே ஏறக்குறைய 300 பேருடன் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டது எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலென்சியா பிராந்தியத்தில் அனைத்து ரயில் சேவைகளையும் பயணிகளின் பாதுகாப்பிற்காக நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஸ்பெயினின் தேசிய ரயில் ஆபரேட்டர் RENFE கூறியது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed