• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Okt 30, 2024

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பயங்கரம்!! கணவனும் மனைவியும் கற்களால் தலையில் நசுக்கிப் படுகொலை

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த, 26 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடனும், மற்றையவர் 120 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed