• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து !12 பேர் பலி

Okt 29, 2024

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், எகிப்தை சேர்ந்த 13 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் செல்ல திட்டமிட்டிருந்தனர்.. இதற்காக படகில் மத்திய தரைக்கடல் வழியாக நேற்று ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர். லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்த அகதிகள் 12 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருநபரை மீட்டனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த 12 அகதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக லிபியா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed