• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள்

Okt 29, 2024

செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புத மான வழிபாடு ஆகும். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கபடுகிறது. உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும்.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசி ரிடம், சித்திரை, அவிட்ட நட்காத்திரகாரர்க ள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்தி ற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.

செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன்.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள் என்ன தெரியுமா? | Sevvai Prathosam Sirappu Valipadu Today Astrology

இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள் என்ன தெரியுமா? | Sevvai Prathosam Sirappu Valipadu Today Astrology
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed