புத்தளம் – தேத்தாப்பலைப் பகுதியில் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
தேத்தப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபொழுது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.
குறித்தச் சம்பவம் நேற்று இரவு புத்தளம் கரமபைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பின்னர் அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.
இதன்பின்னர் தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தேத்தாப்பலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)