• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி விபத்து

Okt 27, 2024

அமெரிக்காவில் (America) நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று (26) மதியம் ஜபிரு ரக சிறிய விமானமும் மற்றும் செஸ்னா 182 ரக சிறிய விமானமும் வானில் பறந்துள்ளன.

இதன்போது, எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது விபத்துக்குள்ளாகியுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் இந்த விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed