• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வடமராட்சியில் 2 நாட்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

Okt 25, 2024

வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம்
துயரத்தைஏற்படுத்தியுள்ளது .

ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது 33 என்பவரே தீடிரென உயிரிழந்துள்ளார் .

நேற்றுமுன் தினம் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

2> இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடிக்கடி சுகயீனமுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .

இந் நிலையில் நேற்றைய தினம் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார் .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed