வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக் காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
5ஆம் ஆண்டு நினைவு. கதிரவேலு இராசமணி (22.10.2024, சிறுப்பிட்டி மேற்கு)
முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது.
குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.
இன்றைய இராசிபலன்கள் (22.10.2024)
மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான இலங்கையின் சிறப்பு மிக்க மற்றும் வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
யாழ்.தெல்லிப்பளையில் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார்
குறிப்பாக யாழ். நல்லூர் ஆலயம், வரலாற்று சிறப்புமிக்க காலி ஒல்லாந்தர் கோட்டை, ஸ்ரீ தலதா மாளிகை, கொழும்பின் தாமரை கோபுரம், சிகிரியா, ஒன்பது வலைவு பாலம், பொலன்னறுவையின் வரலாற்று தளங்கள் உட்பட இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் சேவையின் கீழ் 20,000 ரூபா கட்டணத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.