• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Okt. 19, 2024

 25 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு , தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வர்த்தகர் மலேசியாவிலிருந்து நேற்றையதினம் இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வர்த்தகர் (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, வர்த்தகர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்த தேயிலை பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 179 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed