• Mi.. Jan. 29th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து !

Okt. 15, 2024

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்து. இலங்கோ மதி (15.10.2024, சிறுப்பிட்டி மேற்கு)

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட்டிற்கு செல்லும் 4 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழை காரணமாக விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 8 விமானங்களை தவிர்த்து, மற்ற விமானங்கள் வழக்கம் போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed