திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு ரயில் (12578) பெரம்பூரில் இருந்து இரவு 7.44 மணி அளவில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. 8.27 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்ற சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
புளோரிடாவை புரட்டி எடுத்த மில்டன் புயல்.10 பேர் பரிதாப பலி..
இதில் ரயில் பெட்டிகள் தரம் புரண்ட நிலையில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றனர். பயணிகள் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான பகுதிக்கு மீட்புக்குழுவினர், மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர்.
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் தற்போது வரை மரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாகவும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேட்டியளித்துள்ளார்.