இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நவராத்திரி 9 ஆம் நாள்! சரஸ்வதி அருள் பெற எளிய வழிபாட்டு முறை
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (11.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
யாழில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara)மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.