• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நவராத்திரி 9 ஆம் நாள்! சரஸ்வதி அருள் பெற எளிய வழிபாட்டு முறை

Okt 11, 2024

நவராத்திரியின் ஒன்பாதாவது நாள் மற்றும் நிறைவு நாளை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டாலும் நவராத்திரி காலத்தில் வழக்கமாக செய்யும் வழிபாட்டினை கண்டிப்பாக செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளிலும் முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே நவராத்திரி வழிபாடும், விரதமும் முழுமை பெறும்.

யாழில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

பெரும்பாலானவர்கள் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதியை வழிபடுவதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு, நவராத்திரி தேவியர் வழிபாட்டினை செய்ய தவறி விடுவது உண்டு.

நவராத்திரியின் ஒன்பதாவது நாள், நவமி திதியில் கொண்டாடப்படுவதாகும். இதனை துர்கா நவமி என்றும் சொல்லுவதுண்டு. மற்ற மாதங்களில் வரும் நவமி திதி ராமர் வழிபாட்டிற்குரியதாகும்.

தாமரைக் கோபுர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கான அறிவித்தல்!

ஆனால் புரட்டாசி மாதத்தில் வரும் நவமி மிகவும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது நவராத்திரியின் நிறைவான இரவு என்பதால் இந்த நாளில் தெய்வீக சக்தி உச்சம் பெற்று இருக்கும்.

நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் பக்தர்கள் தொடர்ந்து விரதம் இருந்து, பக்தியுடன் வழிபட்டதற்கு பலன்களை தந்து. பக்தி உச்சநிலையை அடையும் திருநாளாகும்.

தாய், மகளை காப்பாற்றிய ரயில் சாரதி!

இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பதாவது நாள் அக்டோபர் 11ம் திகதி வருகிறது. இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள்.

இன்றைய இராசிபலன்கள் (11.10.2024)

இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபடுவது இவளின் மனதை மகிழ செய்யும் இந்த அம்பிகையை வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள்.

நவராத்திரி 9ம் நாள் வழிபாட்டு முறை 

அம்பிகை வடிவமான பரமேஸ்வரிக்குரிய நாளில் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் சுண்டல் மற்றும் கொண்டைக்கடலை பழம் போன்றவற்றை படைத்து வழிபடுவதால் சிறப்பான பலனை பெறலாம்.

இந்த நாளில் சித்திதாத்ரி அம்மனுக்கு நைவேத்தியமாக பழங்கள், தேங்காய், அல்வா மற்றும் மலராக பாரிஜாதம் போன்றவற்றை படைத்து வழிபடுவதால் சிறப்பான பலனை பெறலாம்.

ஆதி பராசக்தி என்று, நவதுர்கை என்றும், மகாதேவி என்றும் போற்றப்படும் இந்த தேவியை வழிபட்டால் அனைத்தும் சித்திக்கும். கையில் தாமரை, சங்கு, சுதர்சன சக்கரம் போன்றவைகளை வைத்திருக்கும் இவளை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். தெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed