சுவிஸ், சூரிச்சில் உள்ள, சுவிஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனம் (ETH) ஐரோப்பா கண்டத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை!
ரைம்ஸ் உயர் கல்வி இதழின் அண்மைய தரவரிசையிலேயே ETH இற்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலகளவில் இது 11ஆவது இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசையின்படி இரண்டாவது சிறந்த சுவிஸ் பல்கலைக்கழகமாக, சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் ரெக்னொலஜி Lausanne (EPFL) இடம்பெற்றுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. வர்ணிகா வசீகரன் (09.10.2024, ஜெர்மனி)
இது கடந்த தரவரிசையில் இருந்து ஒரு இடம் முன்னேறி 2025 உலக பல்கலைக்கழக தரவரிசையில் 32 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகளவில், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளன:
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (அமெரிக்கா) மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ஆகியவை உள்ளன.
முதல் 100 இடங்களுக்குள் வேறு எந்த சுவிஸ் பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை.
தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 2,092 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.