• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய இராசிபலன்கள் (09.10.2024)

Okt 9, 2024

மேஷம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள்.

பிறந்தநாள் வாழ்த்து. வர்ணிகா வசீகரன் (09.10.2024, ஜெர்மனி)

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். மற்றவரிடம் வெளிப்படையாக பேசுவதாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

பிரித்தானியாவில் உயிரிழந்த யாழ் இளைஞன்

கடகம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சிலமாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

துலாம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷன் ஆவீர்கள். தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மகரம்

குடும்பத்தில் விட்டு கொடுத்துபோவது நல்லது. சகோதர வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். கடமையுணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed