• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவை நெருங்கும் பயங்கர சூறாவளி ! ப்ளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்!

Okt 8, 2024

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிபயங்கர சூறாவளி காரணமாக மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்! கசிந்துள்ள தகவல்

அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான சூறாவளிக்கு மில்டன்(Milton Hurricane) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மில்டன் சூறாவளி வேகமாக வலுவடைந்து ‘வகைமை-5’ பயங்கர சூறாவளியாக மாறியுள்ளது. இது மெக்சிகோ வளைகுடாவின் அண்மையில் உள்ள ப்ளோரிடா மாகாணத்தின் மத்திய பகுதியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி!

வகைமை 5 சூறாவளி என்பதால் அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் ஃப்ளோரிடாவிலிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ் இளைஞனிடம் 15 லட்சம் ஏமாற்றிய ஒருவர் கைது.

இதனால் ஃப்ளோரிடா சாலைகளில் ஏராளமான வாகனங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தி டம்பா பே சர்வதேச விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed