• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவன்!

Okt. 4, 2024

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

இச்சம்பவத்தில் யாழ். பெரியபுலம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, மாணவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்றைய இராசிபலன்கள் (04.10.2024)

குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லையென தெரியவந்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இந்த நிலையில் கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், குறித்த மாணவனை பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நவராத்திரி தினத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளார்.

இதனால் குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதியன்று வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதேவேளை, மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை (02-10-2024) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருடன் சேர்ப்பித்தார்.

இதனையடுத்து குறித்த மாணவன் (03-10-2024) அதிகாலை 2 மணிவரை குறித்த கேமினை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகில் இருந்த காணியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed