இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முந்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை திட்டமிட்டுள்ளவர்கள் உரிய திகதிகளை மாற்றியமைக்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏதேனும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3ஆம் திருவிழா(04.04.2025)
- தெல்லிப்பழை வைத்தியசாலை தாதி ஒருவர் விபத்தில் சிக்கி மரணம்
- யாழில் இளம் அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
- சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்
- இன்றைய இராசிபலன்கள் (04.04.2025)