• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்க

Sep 23, 2024

ஜனநாயகத்தை முழுமையாக பாதுகாப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (23.09.2024)

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ஜனநாயகத்தினுடைய சிறப்பு மக்களால் ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்படுவது. அவ்வாறு தான் நானும் தெரிவு செய்யப்பட்டேன்.

யாழ் விபத்தில் படுகாயமடைந்த சிகிசிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஜனநாயகத்தை முழுமையாக பாதுகாப்பதற்கு என்னுடைய பதவிக்காலத்தில் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயக முறைகளைப் பின்பற்றி அந்த அணுகுமுறைகளுடன் பதவிப்பரிமாற்ற செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

மக்களின் நம்பிக்கை

சவாலான நாடே என்வசம் உள்ளது. பொது மக்களின் நம்பிக்கையை கௌரவத்தை பெறும் பொருட்டு அரசியல் செய்யவுள்ளதுடன் நாட்டிற்கு சேவை செய்யவுள்ளேன்.

நான் இந்திராஜால மாயாஜால நிபுணர் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பைதை நான் அறிந்துள்ளேன்.

சவாலில் இருந்து நாட்டை மீட்பதற்காக என்னால் முடிந்தளவு வகிபாகத்தை மேற்கொள்வேன். கடமையை நிறைவேற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதுடன் சவாலை எதிர்கொள்ள எனது வகிபாகத்தை செய்வதற்கு தயாராக உள்ளேன்.

உலகின் தனிமைப்பட்ட நாடாக இலங்கை எப்பொழுதும் இருக்கவில்லை. சர்வதேசத்துடன் சேர்ந்து பயணிப்பதற்கு இலங்கை தயாராக உள்ளது.

விவசாயத்தை வளப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் எனக்கு ஒத்துழபை்பு வழங்காத வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை வெல்வதற்காக அவர்களிடத்தில் விசுவாத்தைக் கட்டியெழுப்புவதற்காக செயற்படவுள்ளேன். 

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை (23) ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க, தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான அரசிதழும்  வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed