• Sa. Sep 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று மகா சங்கடஹர சதுர்த்தியுடன் புரட்டாசி முதல் சனிக்கிழமை 

Sep 21, 2024

புரட்டாசி மாதமே சிறப்பானது புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும்.

மட்டக்களப்பில் தீக்கிரையான பேச்சி பேச்சியம்மன் ஆலயம்

இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்

அதோடு புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு சனியினால் ஏற்படும் தோஷங்கள் மட்டுமின்றி, எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும்.

யாழ் நீர்வேலிப் பகுதியில் வீடு எரிந்து ஒருவர் பலி!!

சனிபகவானுக்கு  இன்று எள்ளு தீபம் ஏற்றி வழிபடுவதனால்  நம்மை பிடித்த  தோஷங்கள் நீங்கிவிடும்

ந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகள் வருகிறது. இந்த நான்கு சனிக்கிழமைகளுமே மிக முக்கியமான, அதிகம் சிறப்புடையவை ஆகும். புரட்டாசி முதல் சனிக்கிழமை இன்று (21) மகா சங்கடஹர சதுர்த்தி மட்டுமல்ல, இந்த நாளில் மகாபரணியும் இணைந்தே வருகிறது.

நவக்கிரகங்களை சுற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.

புரட்டாசி 2வது சனிக்கிழமை செப்டம்பர் 28ம் தேதி வருகிறது. இது ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி 3வது சனிக்கிழமை அக்டோபர் மாதம் 5 ம் தேதி வருகிறது.

இது நவராத்திரி காலத்துடன் இணைந்து வருகிறது. புரட்டாசி 4வது மற்றும் கடைசி சனிக்கிழமை அக்டோபர் 12ம் தேதி வருகிறது. இது பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரம் மற்றும் விஜயதசமி நாளுடன் இணைந்து வருகிறது.​

திருப்பதி பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு.

இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையுடன், மகாபரணியும் இணைந்து வருகிறது. கார்த்திகை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் பரணி நட்சத்திரங்களை மட்டும் தான் மகா பரணி என நாம் சிறப்பித்து சொல்லுவோம்.

சூரிய பகவான், கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் இருக்கும் போது இந்த ஆண்டு மகாபரணி வருகிறது. இது முன்னோர்களுக்கு மோட்சத்தை வழங்கக் கூடிய அற்புதமான நாளாகும்.

வாழ்நாளில் இதுவரை முன்னோர் வழிபாட்டை செய்ததே கிடையாது என்பவர்கள் இந்த நாளில் ஒரு கை பிடி அளவு சாதத்துடன் எள் கலந்து காகத்திற்கு வைப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் போது, குலதெய்வம் வீட்டிற்கு வருவதுடன், தெய்வமாக மாறி நம்முடைய குடும்பத்தை காத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் இதுவரை விலகி சென்றிருந்தாலும், இந்த நாளில் வழிபட்டால் அவர்களையும் வீட்டிற்கு வரவைத்து, அருள் செய்ய வைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed