• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Sep 10, 2024

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், புலமைப் பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்கும் தடைவிதித்துள்ளது.

பரீட்சை வினாப்பத்திரத்தில் உள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed