மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை மொத்த சந்தையில் 12 வகையான மரக்கறிகளின் மொத்த விலை நூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பலாலி விமான நிலையத்தில் ஒருவர் கைது.
தம்புள்ளை மொத்த சந்தைக்கு நேற்று (06) மலையகம், தாழ்நிலம், வடமேற்கு மற்றும் ஊவா பிரதேசங்களில் இருந்து 31 வகையான மரக்கறிகள் கிடைத்துள்ளதுடன், மொத்த விற்பனை விலைகளும் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவேப்பிலை மற்றும் மலேசிய பூசணிக்காய் மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாவாகவும், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் கட்பீட் மற்றும் பட்டான பூசணிக்காய் மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவாகவும் விற்பனையாகியுள்ளது.
இன்று விக்கினங்களை தீர்க்கும் விநாயகரின் ஆவணி சதுர்த்தி!
கிழங்கு மொத்த விலை கிலோ 50 ரூபாயாகவும், வெள்ளரி கிலோ 55 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை முள்ளங்கியின் மொத்த விலை கிலோ ஒன்று 70 ரூபாவாகவும், தக்காளி மற்றும் நோகோல் ஆகியவற்றின் மொத்த விலை கிலோ 80 ரூபாவாகவும் காணப்பட்டது.
யாழில் தனக்கு தானே தீ வைத்தவர் மரணம்
மேலும், 09 வகையான மலையக மரக்கறிகளின் மொத்த விலை 120 ரூபா தொடக்கம் 180 ரூபாவாக இருந்ததோடு, விலை ஏற்ற இறக்கம் காரணமாக விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மரக்கறிகளின் திடீர் விலை குறைப்பு காரணமாக சில விவசாயிகள் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.